பயணங்களின் புதிய மொழி அந்தோணி குருஸ் ஓவியங்கள்
பயணங்களின் புதிய மொழி அந்தோணி குருஸ் ஓவியங்கள் புதுச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் அந்தோணி குருஸ் தன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் முடித்தவர். ”நான் என் குழந்தைப் பருவத்தையும் என் சுதந்திர வெளிப்பாட்டையும் மீட்டெடுத்த தளம், நான் ஓவியம் கற்ற சென்னை அரசு ஓவியக் கல்லூரிச் சூழல்தான். அங்கு எனக்கு கிடைத்த அனுபவங்களின் வழியாக இப்போது நான் பலவிதமான படைப்பு வெளிகளில் பயணிக்கிறேன்.” என்று தன் அனுபவத்தை நம்மிடம் பேசத் தொடங்குகிறார் ஓவியர் அந்தோணி குருஸ். ஆசிரியர், கோட்டோவியர், வரைகலை வடிவமைப்பாளர், சுவர் ஓவியர், உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர் மற்றும் உதவி பேராசிரியர் என பல நிலைகளில் செயல்பட்டு வரும் இளம் ஓவியர்களில் அந்தோணி குருஸ் குறிப்பிடத்தகுந்தவர். எல்லா ஓவிய மாணவர்களையும் போலவே கல்லூரிக் காலங்களில் பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் பெற்ற பயிற்சிகளின் வழியாக தனக்கான பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அந்தோணி குருஸ். விளம்பரங்களின் வடிவமைப்பாளர் பணியின் வழியாக பார்வையாளர்கள் எனும் நுகர்வோரைச் சென்று அடைவது குறித்த அனுபவம் பெற்றதால், ’என் ...