இந்திய நாடக மரபில் முனைவர் ஷிபு எஸ் கொட்டாரம் பங்களிப்புகள்.
முனைவர் ஞா.கோபி, புதுச்சேரி இந்திய நாடக மரபில் முனைவர் ஷிபு எஸ் கொட்டாரம் பங்களிப்புகள். நாடகவியலாளர் பேராசிரியர் முனைவர் ஷிபு எஸ். கொட்டாரத்தின் புதுச்சேரி கால நாடகச் செயல்களன்களைப் பற்றி மீள் நினைவுக்கு செல்லும் வாய்ப்பு அவர் இறந்த பின் நடக்கும் என நான் ஒருப்பொதும் நினைத்ததில்லை. 07.08.2026 அன்று மதியம் திருச்சூர் நாடகப் பள்ளியில் பயிலும் இலங்கை (மலையக) மாணவர் தம்பி சுதர்சன் தொலைபேசியில் “அண்ணா, ஷிபு மாஸ்டர் 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று மருத்துவமனையில் இறந்து விட்டார்” என மெல்லியக் குரலில் தகவல் தந்தார். அப்போதிலிருந்து ஷிபு அண்ணன் குறித்த நினைவுப் படிமங்கள் மேலெழும்பத் தொடங்கின. என் ஓவியக் கல்லூரியின் இறுதியாண்டில் (2002) நான் நவீன நாடகம் பார்க்கத் தொடங்கி, பின்னர் நடிகராக அதில் பங்கேற்று, நாடகமே என் வாழ்வின் பூரண கற்றல் தளம் என முடிவு செய்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தேன். அதனால், தமிழ் நாடக ஆளுமைகளையும் அவர்களது செயல்பாடுகளையும் தேடித் தெரிந்துக்கொள்வது, அவர்களை நேரில் சந்திப்பது, பயணித்தேனும் அவர்களது படைப்ப...