தற்கால நாடகங்களைப் பார்ப்பதன் வழி கிட்டும் அனுபவங்கள்

ஞா.கோபி தற்கால நாடகங்களைப் பார்ப்பதன் வழி கிட்டும் அனுபவங்கள் நாடகம் / அரங்கம்: தற்காலங்களில், பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ அவ்வப்போது நிகழும் நாடகப் பயிற்சிப்பட்டறைக்குப் போகும் போது. பயிற்சியின் தொடக்கத்தில் மாணவர்களிடம், ‘நாடகம்’ (Drama) என்றால் உங்கள் நினைவில் வருவது அல்லது இருப்பது பற்றிச் சொல்லுங்கள்? என்றால். 98% பேர் தொலைக்காட்சித் தொடர் நாடகம் என்பதையே சொல்வார்கள். அதுபோல் அரங்கம் (Theatre) என்றால் என்ன? என்பதற்கு சினிமா தியேட்டர் என்பதுவே பதிலாக இருக்கிறது. உண்மையில் அவர்களின் அனுபவத்திலும் நினைவிலும் அவைகளே நிறைந்துள்ளன. ஏன், புதுச்சேரி போன்ற கலைகளில் சிறந்த மண்ணில் வாழ்ந்து 1990களின் இறுதியில் ஓவியக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்ற காலம் வரை எனக்கும் முழுமையானதொரு மேடை நாடகம் பார்த்த அனுபவம் இல்லை. நான்காம் ஆண்டின் தொடக்கத்தில், புதுச்சேரி அலையான்ஸ் பிரான்சிஸில் நடைபெற்ற ஒரு ஓவியக் கண்காட்சியைப் பார்ப்பதற்குப் போன எனக்கு, அன்றைய தினம் அ...