எளியோர் வலிகளை நாடகப் படிமமாக்கிய ரத்தன் தியாம் – 1948 – 2025
ஞா. கோபி, நாடகவியலாளர். எளியோர் வலிகளை நாடகப் படிமமாக்கிய ரத்தன் தியாம் – 1948 – 2025 1980 களிலிருந்து இந்திய நாடகத்தை தனது வட்டாரம் சார்ந்த வாழ்வியல் சடங்குகளின் அழகியல் மற்றும் உடல்மொழிகள் மூலம், சமகால படைப்புகளாய் உருவாக்கம் செய்து உலகப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தவர் நாடக இயக்குநர் ரத்தன் தியாம். மணிப்பூரின் கோரஸ் ரெபர்ட்டரி தியேட்டரின் நிறுவனரும் இந்திய நாடகங்களில் தவிர்க்கவே முடியாத படைப்பாளி பத்மஸ்ரீ ரத்தன் தியாம். மணிப்பூர் பழங்குடிகள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறை மற்றும் போருக்கு எதிராக தனது காத்திரமான நாடக மொழிகளைக் கொண்டு, தன் வாழ்நாளின் இறுதிவரைப் போராடிய ரத்தன் தியாமுக்கு, தமிழ் நாடகக் கலைஞர்கள் சார்பில் மனமார்ந்த அஞ்சலி. 23 ஜூலை 2025 அன்று, தனது 77 வது வயதில் மறைந்த தியாமிற்கு, இரங்கல் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “தியாம், மணிப்பூர் நாடகத்தை உலக வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்த ஒரு உண்மையான ஜாம்பவான்" என...