Posts

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

Image
  எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் ஞா. கோபி          நோர்வே நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜான் ஓலாவ் ஃபோஸ் john fosse   1959 ஆண்டு செப்டம்பர் 29 ஆம் நாள் பிறந்தார்.   இவர் ஒரு நோர்வே எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். கடந்த 2023 இல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. "பேச மறுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக" நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்கு அவர் பெயர் இடம்பெறுவதற்கு முன்பே ஃபோஸின் படைப்புகளான, எழுபதுக்கும் மேற்பட்ட நாவல்கள், கவிதைகள், குழந்தைகள் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் நாடகங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஹென்ரிக் இப்சனுக்குப் பிறகு அதிகம் நிகழ்த்தப்பட்ட நாடகங்களின் நோர்வே நாடக ஆசிரியர், ஃபோஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் ஃபோஸின் பிரதிகளின் அடிப்பட...

செயல்திறன் அரங்கக் கலையின் கூர்நோக்கு - மரினா அப்ரமோவிக்

Image
  செயல்திறன் அரங்கக் கலையின் கூர்நோக்கு - மரினா அப்ரமோவிக் "எனது   படைப்புப் பணியின் முழு நோக்கமும் மனித ஆன்மாவை மேம்படுத்துவதாகும்." என்று சொல்லும், மரினா அப்ரமோவிக் ( Marina Abramovic ) - 1946 ஆம் ஆண்டில் செர்பியாவில் பிறந்தவர் .   அரங்கியல் ஊடகத்தில் இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்த்துக்கலைக் கலைஞர் ஆவார். மேலும், எழுத்துத்துறை மற்றும் அரங்கப்பூர்வமான திரைப்படத் தயாரிப்புப் பணியிலும் தடம் பதித்தவர். உலக அரங்கச் செயல்பாடுகளில் அவரது படைப்புகள்   ’ உடல் மையக் கலை’ (Body centered art) , காலத்தை மையமிட்டப் படைப்பு ( Durational art ) மற்றும் பெண்ணியக் கலை , கலைஞருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான உறவு , உடலின் வரம்புகள் மற்றும் மனதின் சாத்தியங்களை மரினா அப்ரமோவிக்கின் படைப்புகள் ஆராய்கிறது என்பர் அரங்க விமர்சகர்கள் . அரங்கில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக படைப்புச் சக்தி குறையாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மரினா, தன்னை " செயல்திறன் கலையின் மூதாய் " என்பதாக அறிமுகம்...