“மாள்வுறு” – தமிழ் நாடக நிகழ்த்துப்பிரதியை முன்வைத்து…
நாடக தினம் – அரசியல் முன்னெடுப்பு - நிகழ்வு “மாள்வுறு” – தமிழ் நாடக நிகழ்த்துப்பிரதியை முன்வைத்து… 27.03.2018 அன்று மாலை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூரில் நிகழ்த்தப்பட்ட நாடகம். தற்காலத் தமிழ் அரங்கச் சூழலில் இந்நாடக நிகழ்வு, அது உருவான விதம், அப்பிரதி முன்னெடுக்க விழையும் அரசியல் நிலைப்பாடு மற்றும் நடிகர்களின் வழங்கு நுட்பங்கள் போன்றவற்றை மிக நுட்பமாக நோக்க வேண்டிய தேவையிருக்கிறது. 1961ல் International Theatre Institute முன்னெடுப்பில், மார்ச் 27ஆம் தேதி ‘உலக நாடக தினம்’ என குறிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அன்றைய தினம் உலக நாடுகள் அனைத்திலும் நாடக நிகழ்வுகள், கருத்தரங்கங்கள் என நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் கலாச்சாரத்துறை அமைச்சகம், இந்திய அரசு, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர் ஆகியவற்றுடன் இணைந்து தஞ்சையை இயங்குதளமாகக் கொண்டு இயங்கும் ‘உதிரி நாடக நிலம்’ நாடக தினத்தைப் புதிய பல பார்வையாளர்களோடு கொண்டாடியது. சமகால நாடகச் செயல்பாட்டார்களைச் சிறப்பித்தல் மற்றும் உதிரி நாடக நிலத்தின் புதிய படைப்பான “மாள்வுறு” நாடகம் என்பதே நிகழ்வின் உ...