கூர்ந்து நோக்கல் – அமெரிக்கக் கருப்பினப் பெண் நாடக ஆசிரியர் “டொம்னிக் மொரிஸ்” உடனான நேர்காணல்.

கூர்ந்து நோக்கல் – அமெரிக்கக் கருப்பினப் பெண் நாடக ஆசிரியர் “டொம்னிக் மொரிஸ்” உடனான நேர்காணல். ------------------------------------------------------------------- டொம்னிக் மொரிஸ் : நாடக எழுத்துக்கு பல விருதுகள் பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியர். இவரது ஒன்பது நாடகங்களுமே உலகம் முழுக்க கவனம் குவித்திருப்பவை. சமகால கருப்பினப் பெண் நாடக ஆசிரியர். மையா சஃபானி : நேர்காணலை நடத்தியவர். தற்போது சிக்னேச்சர் தியேட்டரில் கலை மற்றும் கல்வி திட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். கேள்வி : உங்கள் நாடகத் தொடக்கம் எங்கு தோன்றி வளர்ந்தது? நாடக எழுத்தை நோக்கி உந்தித் தள்ளியது எது? டொம்னிக் மொரிஸ் : என்னுடைய இரண்டாம் வகுப்பில் நான் நடிக்கத் தொடங்கினேன். ஆம், பிழைகள் அதிகம் வரும் வேலைகளை மிக முன்னதாகவே தொடங்கியிருக்கிறேன்(சிரிக்கிறார்). அதாவது இரண்டாம் வகுப்பிலேயே புதிர் கதைகளையும் குறு நாவல்களையும் எழுதிப் பார்க்கத் தொடங்கினேன் (பெரும்பாலும் என்னைப் பற்றியேதான் எழுதியிருக்கிறேன். அதை எப்படி வகைப் படுத்தியிருந்தேன் என்றால், “முட்டைக்கோஸுடன் இணைந்த குழந்தையின் புதிர்கள்”. அத...