அரங்க ஆசிரியர் அஸ்வகோஷ் - அரங்க ஆட்டம் தமிழ் நாடகம்
அரங்க ஆசிரியர் அஸ்வகோஷ் - அரங்க ஆட்டம் தமிழ் நாடகம் ஆய்வு வெளி தமிழ் அரங்கின் தொடர் போக்கை கவனித்து ஆய்வு நோக்கில் பதிவு செய்வது எனும் செயல் தொடங்கி, சுமார் ஐம்பது ஆண்டு காலமே ஆகியிருக்கும். அதற்கு பின் தொடர்ந்த ஆய்வும் ஒவ்வொன்றும் மிக கவனமுடன் தமிழ் அரங்கமெனும் பெருவெளியின் தொடர் மரபை பற்றிய புரிதலை தமிழ் சமூகத்திற்கு வழங்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில தரவுகளின் தொகுப்பு வரிசை வழி அரங்க ஆய்வாளர்கள் ஒரு சிலர், மறக்க மற்றும் மறுக்கவியலாதவர்கள் ஆகியிருக்கின்றனர். அவ்வரிசையில் கார்த்திகேசு சிவத்தம்பி, ஏ.என். பெருமாள் போன்றோர் முக்கியமானவர்கள். அவர்களைத் தொடர்ந்து அஸ்வகோஷின் அரங்கம் பற்றிய ஆய்வானது,பயனாளர்களுக்கு அது சார்ந்த தளத்தில் நின்று தரவுகளின் நேர்த்தியான தொகுப்பு எனும் அளவில் நிறைந்த பயனைத் தந்துள்ளது. ஆம், அரங்கக் கல்வியியல் புலத்தில் தமிழ் நாடகம் எனும் பாடப்பகுதி இருந்தாலும், அது சார்ந்த ஆய்வுத் தொகுப்பு இல்லாதது நீண்டகால பெருங்குறையே. அதை தகர்த்து, அக்க...