நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்
போர்க்காலம் – முன்னும் பின்னும் நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள் முன்னுரை ஒரு நாடகத் தயாரிப்பென்பது அப்பிரதியின் கருப்பொருளை பார்வையாளர்களிடத்து கடத்துவது என்பதே அதன் நோக்கத்தின் இறுதி நிலையாகும். அதே வேளை, அப்பிரதி உருவாக்கம் தொடங்கி அதன் நிகழ்வு வரையான செயல்பாட்டு முறைமைகளும் (process methods) அதி முக்கியமானது. குறிப்பாக இத்துறை சார்ந்தோர்க்கும் நாடக ஆய்வாளர்களுக்கும் அத்தயாரிப்பின் பின்னுள்ள செயல்முறை அதி முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் அச்செயல்முறை வடிவங்களும் முறைகளுமே நிகழ்வு நோக்கி முன்னேற அடித்தளமிடுவதோடு நிகழ்வின் வெற்றி தோல்வியையும் தீர்மானிப்பதும் ஆகும். அவ்வகையில் நிகழ்வு பற்றியான விமர்சனங்களும் பார்வைகளும் வெளிப்படும் வகைகளை உலக நாடக அரங்கில் நாம் பார்க்கிறோம். அதே சமயம் தமிழ் நாடகத்தில் இவ்வகையான ஆய்வுப் போக்கு மிகமிகக் குறைவு. குறைவான நிலையை சுட்டிக்காட்டும் அதே நேரம் அதன் அவசியத்த...