ஒடுக்கப்பட்டோரின் உணர்வாய், உடலாய் அரங்கில் அதிர்ந்த உயிர் - கே.ஏ.ஜி
ஒடுக்கப்பட்டோரின் உணர்வாய், உடலாய் அரங்கில் அதிர்ந்த உயிர் - கே.ஏ.ஜி (கரு. அழ. குணசேகரன்) நினைவில் உறைந்திருக்கும் உயிர்கள் மரணிக்கும்போது, நினைவுத்தப்பாமல் உயிருள்ளவர்க்குதான் வேதனை என்பதை நமக்கு ஆழமாகப் புரிய வைத்திருக்கிறது,கே.ஏ.ஜி யின் மரணம். கே.ஏ.ஜி என்றழைக்கப்படும் கரு.அழ. குணசேகரன் அவர்களின் உயிர் 17.01.2016 அன்று அவர் உடலைவிட்டு பிரிந்தது என்ற செய்தி என் தொலைபேசிக்கு வந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நாடகம் நிகழ்த்திவிட்டு எங்கள் குழுவினருடன், நான் அப்போது நாக்பூர் ரயில் நிலையத்தில் சென்னை ரயிலுக்காக காத்திருந்தேன்....