ஓவியர் ஸ்ரீதரின் படைப்பில் கிளர்ந்தெழும் சுதந்திரமும் எதிர்மொழியும்
ஓவியர் ஸ்ரீதரின் படைப்பில் கிளர்ந்தெழும் சுதந்திரமும் எதிர்மொழியும் ஓர் ஓவியத்தையோ அல்லது ஓர் ஓவியரின் ஓவிய வரிசைகளையோ நாம் நேரடியாகப் பார்க்கும் போது நமக்குள் என்னென்ன உணர்வுகள் கிளர்ந்தெழுகின்றன? என்பது பற்றி நமக்குள்ளோ அல்லது நம் நட்பு வட்டத்திலோ பேசியிருக்கிறோமா? அப்படிப் பேசியிருந்தால் அந்த உணர்வுகளின் அசைவுகள் எவ்விதத்தில் இருக்கும்? அந்த ஓவியங்கள் தரும் அனுபவம் என்பதற்கும் நம் வாழ்வியல் அனுபவங்களுக்கும் உள்ள தொடர்பு என்பது என்ன? அவை முன்னெடுக்க விரும்பும் சுதந்திரம் என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இச்சமூகக் கட்டமைப்புகளை எவ்விதத்தில் கேள்விக்குட்படுத்துகிறது? என வளர்ந்து கொண்டே போகும் கேள்விகளுக்கான விடைகள் எங்கிருந்து நமக்குக் கிடைக்கும்? என்றால், அத்தகைய கேள்விகளை நேரடியாகவோ அல்லது வாழ்வியலில் தான் தேடும் சுதந்திர உணர்வை முன் வைத்துப் படைக்கப்பட்ட படைப்புகளை வைத்து ஆய்ந்து அறிதலே நல்லதொரு வழியாகும். அவ்வகையில்தான் ஓவியர் ஸ்ரீதரின் படைப்புலகம் நம்மை உற்சாகமாக வரவேற்கிறது. குறிப்பாக, அவர் படைப்புகள் இங்கு யார் மீதும் காழ்ப்புண...