Posts

Showing posts from December, 2020

இந்திய நாடகமெனும் பெருங்கனவை நிகழ்த்திய இப்ராஹிம் அல்காசி

Image
  இந்திய நாடகமெனும் பெருங்கனவை நிகழ்த்திய இப்ராஹிம் அல்காசி                                                                                                                   ஞா. கோபி, புதுச்சேரி இந்திய   நவீன அரங்கின் பிதாமகர் இப்ராஹிம் அல்காசி 2020 ஆகஸ்ட் 4 ஆம் தேதி தனது 95 வயதில் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் காலமானார் என்ற செய்தியே அவரின் நாடகச் செயல்பாடுகளை நாம் வரலாறுகளிலிருந்தும் நினைவுகளிலிருந்தும் பகிர்ந்துகொள்வதற்கானக் காரணம் . ’இப்ராஹிம் அல்காசி’ , 1925, அக்டோபர் 18 ல்   பிறந்த   ஒரு இந்திய நாடக இயக்குநரும் நாடக ஆசிரியருமாவார் . பொதுவாக அல்காசி ஒரு கண்டிப்பான முறையுடன் கூடிய நாடக ஒழுக்கநெறி   கொண்டவர் என்ற அறிமுகம் அவர் வாழ்நாள் முழுக்க அ...