Posts

Showing posts from June, 2021

சிதைவுகளினூடே அழகியல் மொழி பேசும் ஓவியர் இராஜராஜன் படைப்புகள்

Image
  சிதைவுகளினூடே அழகியல் மொழி பேசும் ஓவியர் இராஜராஜன் படைப்புகள்       தற்கால ஓவியக்கலையின் வெளிப்பாடுகள், அதன் படைப்புச் செயலில் ஈடுபடும் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களாக இருக்கும் கலை ஆர்வலர்களின் சுதந்திர உணர்வைத் தூண்டுகிறது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் உருவாக்கப்படும் கலைப் படைப்புகள் பரிசோதனைகளை பெருமளவில் கொண்டாடுகிறது. மேலும், கடந்த கால சம்பிரதாய மரபுகளை துணிந்து ஒதுக்கியும் வைக்கிறது. வெவ்வேறு புதிய வண்ண பொருள்களையும், அவற்றை வினியோகிக்கும் முறைகள் வழி காட்சிக் கலையான ஓவியங்களைப் பார்க்கும் புதிய வழிகளையும் நமக்கு பழக்கப்படுத்துகிறது. இந்த வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அத்தகைய   படைப்புகள் தரும் உளவியல் தரிசனங்கள் எல்லாமே நவீன ஓவியக் கலையின் வழி சமூக மேம்பாட்டினையும் உறுதி செய்கிறது. இத்தகைய நவீன ஓவியக் கலையால் ஆராயப்படும் கருப்பொருள்கள் மிகவும் சமூக உணர்வுள்ளவையாக மாற, பெரும் வாய்ப்பு ஏற்படுத்தும் தளமாக இருந்தவை இருப்பவை ஒவ்வோரு காலகட்டத்தில் உருவான, ஓவியக் கல்லூரிகளும் அதன் ஆசிரியர்களும் என்றால் மிகையில்லை. அத்தகைய ஆசிரியர்களால் இந்தியா மட்டு...