சப்தர் ஹஷ்மியின் கனவு அரங்கம்
சப்தர் ஹஷ்மியின் கனவு அரங்கம் 1989 ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் நாள், டில்லியில் ஜந்தாபூர் செல்லும் மையச் சாலையின் சந்திப்பு ஒன்றில் ஜனம் குழுவின் ‘உரக்கப்பேசு’ நாடகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிகழ்ந்த குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயம் அடைந்தார் சப்தர் ஹஷ்மி. 2ஆம் தேதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகளும் பலனலிக்காமல் சப்தர் ஹஷ்மியின் உயிர் பிரிந்தது. 3ஆம் தேதி அவர் உடல் செங்கொடி போர்த்தப்பட்டு பெரும் ஊர்வலத்தில் சென்று அவருடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 1ஆம் தேதி நாடகம் நிறுத்தப்பட்ட அதே இடத்திலேயே 4ஆம் தேதி சப்தரின் மனைவி மாலா உள்ளிட்ட ஜனம் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. சப்தர் எனும் நாடக ஆசிரியர் மற்றும் ஜனம் குழுவின் தலைவர் இறந்த 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்தேறிய அந்த நிகழ்வு இந்திய நாடக வரலாற்றில் தனிப் பெரும் பக்கத்தை நிரப்பிக் கொண்டது. இதனால் சப்தர் ஒரு புரட்சிகர நாடக இயக்குனர் என்றும் வீதி நாடக வடிவம் என்பது ஒரு போராட்ட வடிவம் என்பது போன்ற ஒற்றைப் பார்வை மேலோங்கியதைத் தான் வரலாறு நெடுகிலும் நாம் காண முடிகிறது. மாறாக சப்தர் வீதி நாடக வடிவம் குறித்து எவ்வகையில் சிந்...