Posts

Showing posts from November, 2022
Image
  மனித மனங்களை அரங்கம் புதுமைப்படுத்தும் என்று நிருபித்தவர் பீட்டர் புரூக் ( 1925 - 2022)       உ லக அரங்கம் முழுவதும் தனது அரங்கப்படைப்புகளால் பெரும் செல்வாக்கு பெற்ற பிரிட்டிஷ் நாடக மற்றும் திரைப்பட இயக்குநரான பீட்டர் புரூக் தனது 97வது வயதில் 02.07.2022 அன்று காலமானார். அவர் 21 மார்ச் 1925 இல் லண்டனில் பிறந்தார் அவர், தனது ஏழு வயதில், ஹேம்லெட்டின் நாடகத்தைப் படித்து தனது பெற்றோர்களின் முன்னிலையில் மிகச் சுருக்கமாக நடித்தும் காண்பித்தவர். அவர் முதலில் இங்கிலாந்தில், 1945 முதல் பர்மிங்காம் ரெபர்ட்டரி தியேட்டரிலும், 1947 முதல் ராயல் ஓபரா ஹவுஸிலும், 1962 முதல் ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்திலும் பணியாற்றினார். அங்கு அவர் இருந்த காலங்களில்தான் ஜெரோம் ராபின்ஸ் பாலே மற்றும் பீக்கிங் சர்க்கஸ் ( Jerome Robbins ballet and the Peking Circus)   இரண்டின் தாக்கத்தால் ஷேக்ஸ்பியரின் “மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம்” நாடகத்தை, ஒரு வெள்ளை கனசதுரத் தளத்தில் எளிய அரங்கப்பொருட்களுடன் ப்ரூக்கின் தயாரிப்பாக உருவாகி நிகழ்த்தப்பட்டது. அந்த எளிமையின் வலிமைதான் உலக அரங்கவியலாளர்க...