Posts

Showing posts from February, 2023

முடிவற்ற பாதையில் ஓடிக்கொண்டே இருக்கும் ‘அன்று பூட்டிய வண்டி’ - அஞ்சலி - ந. முத்துசாமி (1936 -2018)

Image
                                                             முடிவற்ற பாதையில் ஓடிக்கொண்டே இருக்கும் ‘அன்று பூட்டிய வண்டி’ (கூத்துப்பட்டறை ந. முத்துசாமி – 1932 – 2018) 1970ல் சென்னை கிருஷ்ணகான சபாவில் யாரும் எதிபார்க்காத நாளொன்றில், தனஞ்செயனின் கதகளியைப் பற்றிய பேச்சும் பயிற்சிக் காட்டலும் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் ‘தெருக்கூத்துக்கும் கதகளிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னென்ன? என்ற கேள்வி முத்துசாமியிடம் இருந்து சத்தமாய் பொதுவில் விழுந்திருக்கிறது. சத்தமான அந்த கேள்விக்கு ஒப்பீடல் காரணமல்ல. தெருக்கூத்தை பார்க்கும் அனுபவத்திலெழுந்த கேள்விச் சத்தம் அது. அக்கேள்வி திரை அகற்றி நடிகன் பார்வையாளர்களித்தே ஏற்படுத்தப்படுத்திய புதிய உரையாடல். அவருடைய நடிகர்கள் ஓட வேண்டிய தொடர் ஓட்டத்திற்காக, அவருளிருந்து...