உலகப்புகழ் ஓவியங்களில் – குதிரைகளின் இருத்தல்
உலகப்புகழ் ஓவியங்களில் – குதிரைகளின் இருத்தல் ஓவியங்கள் எனும் ஊடகத்தில் செயலாற்றவும், பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளவும் விரும்புபவர்கள் அந்த ஊடக மொழியின் அடுக்குகளை அறிந்துக் கொள்வது மிக அவசியமாகிறது. அவ்வகையில், உலகப்புகழ் கலைஞர்கள் வண்ணம் தீட்டும்போது ஒரு பொருளை அல்லது உயிரினங்களை தீட்டும்போது என்னென்னவாகப் பார்த்திருக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது பற்றிய கண்ணோட்டத்தில் பயணிக்கும் முயற்சியே இனி வருபவை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள், குகையின் உள் மற்றும் வெளிச்சுற்றுப் பாறைகளில் வரைந்திருக்கின்றனர். அவற்றில், தத்தமதுக் குழுவினருடன் குதிரைகளின் இருப்பு நிலைகள் என்னவாக இருந்தது என வரைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. காலப்போக்கில் ஓவியர்கள் இந்த விலங்குகளிடத்தில் மனிதர்கள் கொண்ட அன்பு, அழகு மற்றும் அவ்விலங்கின் புரிந்துக்கொள்ளும் சக்தி போன்றவன்றால் ஈர்க்கப்பட்டனர். மேலும் அரச அதிகாரம் எனும் கட்டமைப்பிற்குள் இவ்விலங்கு அதிகாரத்தின் குறியீடாக மாறிப்போன வரலாறும் இருந்திருக்கிறது, இருக்கிறது. அந்தப் புரிதல்களையெல்லாம் அந்தந்தக்க...