செயல்திறன் அரங்கக் கலையின் கூர்நோக்கு - மரினா அப்ரமோவிக்
செயல்திறன் அரங்கக் கலையின் கூர்நோக்கு - மரினா அப்ரமோவிக் "எனது படைப்புப் பணியின் முழு நோக்கமும் மனித ஆன்மாவை மேம்படுத்துவதாகும்." என்று சொல்லும், மரினா அப்ரமோவிக் ( Marina Abramovic ) - 1946 ஆம் ஆண்டில் செர்பியாவில் பிறந்தவர் . அரங்கியல் ஊடகத்தில் இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்த்துக்கலைக் கலைஞர் ஆவார். மேலும், எழுத்துத்துறை மற்றும் அரங்கப்பூர்வமான திரைப்படத் தயாரிப்புப் பணியிலும் தடம் பதித்தவர். உலக அரங்கச் செயல்பாடுகளில் அவரது படைப்புகள் ’ உடல் மையக் கலை’ (Body centered art) , காலத்தை மையமிட்டப் படைப்பு ( Durational art ) மற்றும் பெண்ணியக் கலை , கலைஞருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான உறவு , உடலின் வரம்புகள் மற்றும் மனதின் சாத்தியங்களை மரினா அப்ரமோவிக்கின் படைப்புகள் ஆராய்கிறது என்பர் அரங்க விமர்சகர்கள் . அரங்கில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக படைப்புச் சக்தி குறையாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மரினா, தன்னை " செயல்திறன் கலையின் மூதாய் " என்பதாக அறிமுகம்...