எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி
எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் ஞா. கோபி நோர்வே நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜான் ஓலாவ் ஃபோஸ் john fosse 1959 ஆண்டு செப்டம்பர் 29 ஆம் நாள் பிறந்தார். இவர் ஒரு நோர்வே எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். கடந்த 2023 இல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. "பேச மறுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக" நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்கு அவர் பெயர் இடம்பெறுவதற்கு முன்பே ஃபோஸின் படைப்புகளான, எழுபதுக்கும் மேற்பட்ட நாவல்கள், கவிதைகள், குழந்தைகள் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் நாடகங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஹென்ரிக் இப்சனுக்குப் பிறகு அதிகம் நிகழ்த்தப்பட்ட நாடகங்களின் நோர்வே நாடக ஆசிரியர், ஃபோஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் ஃபோஸின் பிரதிகளின் அடிப்பட...