நாடகத்தின் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் விரிவான உளவியல் சுயவிவரங்களை உருவாக்குபவர் - கேட்டி மிட்செல்
நாடகத்தின் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் விரிவான உளவியல் சுயவிவரங்களை உருவாக்குபவர் - கேட்டி மிட்செல் "கலை கலைக்காகவே என்பதை நான் நம்புவதில்லை," “அது முடிவில்லாத உரையாடலுக்கு இட்டுச் செல்லும். அதனால் முதலில், கலைஞராக என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டிய அடிப்படை கேள்வியாக நான் நினைப்பது, ‘உலக சமூகத்தில் எனது பொறுப்பு என்ன? என்பதைத்தான்.’ ”- கேட்டி மிட்செல் கேட்டி மிட்செல் ஒரு பிரிட்டிஷ் நாடக இயக்குனர் . அவருடைய தனித்துவமான அரங்க வெளிப்பாடு மற்றும் சமரசமற்ற இயக்க முறைகள் வழி விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் வெவ்வேறு கோணங்களில் அணுகுவது முக்கியத்துவம் நிறைந்தது . அவை சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் , அவரது தயாரிப்புகள் தற்காலத் தன்மையானவை. அத்தன்மையே அவரை, இங்கிலாந்தின் சமகால அரங்கச் செயல்திறனில் முன்னணி பெயர்களில் ஒன்றாக நிறுவியுள்ளது . மிட்செல் 1964 ல் பெர்க்ஷயரில் ( Berkshire) பிறந்தார் . ஹெர்மிடேஜ் ( Hermitage) என்ற சிறிய கிராமத்தில் வளர்ந்தார் மற்றும் ஆக்ஸ்போர்டின் மாக்டலென் கல்லூரியில் (M...