Posts

Showing posts from December, 2021
Image
உளக் கண்ணிலிருந்து திறவுகொள்ளும் அறைகள் – கி. சரவணன் ஓவியங்கள்   பழங்காலத்தொட்டே, மிகச் சிறந்த ஓவியங்கள் எல்லாம், இந்த பிரபஞ்சத்திலிருந்து தன் குறிக்கோளை சரிவர நிறைவேற்றக்கூடியவை எவைகளோ அவைற்றையெல்லாம் எப்போதும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறாக இயற்கை தனித்தனியான இடங்களில், சூழல்களையும், சிறப்புப் பண்புகளையும் எப்போதும் பரப்பி வைத்திருக்கிறது. அவற்றை உளக் கண் வழி நோக்கும் கலைஞர்கள் நுண்நயம் கொண்ட அந்த கணத்துச் சேர்க்கைகளிலிருந்து மகிழ்வூட்டும் பல உண்மைகளைக் கண்டடைகிறார்கள். ஆகையால்தான், படைப்பு மனம் எப்போதும் வறட்டுத்தனமாக நகல் எடுப்பதைத் தவிர்த்து அதில் தன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தவே விரும்புகிறது. அந்த விருப்பத்தின் காரணமாகவே ஓவியர்கள் நம்பும் வெளிப்பாட்டு வகைமைகள் வழி, புதிய கண்டுபிடிப்பாளனாகவும் ஆகி விடுகிறார்கள்.   அவ்வகையில், உலகெங்கிலும் உள்ள தற்கால ஓவியர்களின் படைப்புகள், அப்படைப்புகளில் ஈடுபடும் செயல்கிரமங்கள், (Process) வண்ண விநியோகம் நிகழ்த்தும் கணங்கள் மற்றும் இயங்கு வெளியைக் கட்டமைப்பது போன்றவற்றில் கூடுதல் கவனம் குவிக்கத் துவங்கியுள்ளது. அச்செயல்...

கன்ஹைலாலின் அரங்கப் பார்வைகள்

Image
  ஞா.கோபி, புதுச்சேரி   கன்ஹைலாலின் அரங்கப் பார்வைகள்   இந்திய நாடகக் கலையில் தனித்துவமிக்க ஆளுமை , ஹெய்ஸ்னம் கன்ஹைலால் (1941 - 2016). 1969 ஆம் ஆண்டில் மணிப்பூரில் அவரால் நிறுவப்பட்ட அரங்க ஆய்வகமான கலக்ஷேத்ராவின் இயக்குநராக இருந்தவர் . அதன் வழியாக புதிய நடிப்பு முறைகளை உருவாக்கி, அதன் வழி புதிய நாடகங்களைப் படைத்துக் காட்டியவர். ‘பூமியின் அரங்கம்’ என்பதே தன் படைப்பிற்கும் அது சார்ந்த நடிப்பு முறைமைகளுக்குமான பெயர் என தனித்த செயல் வழி நிருபித்தவர். கன்ஹைலால், அவரது நாடக கூட்டாளியும் இந்தியாவின் மிகச் சிறந்த நாடக நடிகருமான சபித்ரி ஹெய்ஸ்னம் என்பவரை மணந்தார். அந்த இணையர்களின் படைப்புகளில் ’ஆப்பிரிக்க நினைவுகள்’, ‘திரொளபதி’ போன்றவை தனித்துப் பேசப்பட வேண்டியவை. கன்ஹைலாலின் நாடகப் பணிக்காக , அவருக்கு 2004 ல் பத்மஸ்ரீ சிவிலியன் விருதும் , 2016 ல் பத்ம பூஷண் சிவில் விருதும் இந்திய அரசால் வழங்கப்பட்டது . தற்போதுள்ள நாடக மொழியில் ஒரு புதிய சொற்களஞ்சியத்தை ஆராய்ந்து உறுதி செய்தவர் . அக்டோபர் 6 ஆம்   தேதி 2016 அன்று நோய்வாய்ப்பட்ட காரணத...

நடுக்கடலில் (மொழிபெயர்ப்பு நாடகங்கள்)

Image
    நடுக்கடலில் (மொழிபெயர்ப்பு நாடகங்கள்) தொகுப்பாசிரியர் வெளி ரங்கராஜன் விலை: ரூபாய் 220 வெளியீடு: தமிழ்வெளி பதிப்பகம் 1- பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை -600122. தொடர்புக்கு: +91 9094005600    1980 களில் பரவலாக தமிழில் அறியப்பட்ட, நவீன நாடகம் என்ற சொல்லும் செயல்பாடுகளும்    அக்காலத்தைய சிறுபத்திரிக்கைச் சூழலோடு தொடர்புடையது என்பதை மறுக்கவியலாது. அதுவும் பல்வேறு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்று நாடகப்பிரதிகளும் சேர்ந்து, தமிழ் நாடகப் படைப்புலகின் பரிமாணங்களைக் கூட்டியது என்பதே உண்மையும் ஆகும். அதன் பின் 1990 ன் தொடக்கத்தில் “நாம் நாடகத்தைப் பேசுவதற்கு இதை விட பொருத்தமான சந்தர்ப்பம் இருக்க முடியாது” என்ற தெளிந்தப் பார்வையுடன் வெளிவந்தது நாடக ’வெளி’ யின் முதல் இதழ். தொடர்ந்த இதழ்களில் பல மொழி நாடகங்கள், உலக நாடக ஆசிரியர்களின் நேர்காணல்கள் மற்றும் தமிழின் புதிய நாடகங்கள் என, எவ்வித ஆர்பாட்டமும் இன்றி 90களின் இறுதிவரை தமிழ் நாடகப் பரப்பின் பரிமாணங்களைக் கூட்டியிருக்கிறது என்பதே உண்...