Posts

Showing posts from June, 2026

’சிகப்புக் கண்ணாடி’ நிகழ்த்துப்பிரதியின் பரிமாணம் கூட்டிய ஒளி வடிவம்

Image
  ’சிகப்புக் கண்ணாடி’ நிகழ்த்துப்பிரதியின் பரிமாணம் கூட்டிய ஒளி வடிவம்       மேடையேற்றப்படும் நாடக நிகழ்வானது அப்பிரதியின் சாரம் கெடாமல் பார்வையாளர்களிடத்தே கடத்த மிக முக்கியக் காரணிகளாக நடிக உடல்கள் ஒருபுறமும் அதன் இயங்கு நிலைகளை காட்சி அனுபவமாக்கும் ஒளி, ஒலி வடிவமும் செயலாற்றுகின்றன. அவ்வகையில் என்னைப் போன்று ஓவியப் பரப்பிலிருந்து   நாடக நிகழ்வுகளைக் கண்டு, அதன்பால் ஈர்க்கப்பட்டு நாடகத்தையே தொழிலாய் கொண்ட கலை மனம் எப்போதும் காட்சி சார்ந்தே இயங்கும். அதற்காக, நடிகர்களின் மன உடல்கள், காட்சியமைப்பு மற்றும் அரங்கப் பொருட்கள் போன்றவற்றை எழுதும் நாடகப்பிரதியிலேயே அதன் மேல் ஒளி எங்கிருந்து, என்ன வண்ணத்தில் வருகிறது என்பதையெல்லாம்   எப்போதுமே எழுதிக்கொண்டுப் போகிறது என் படைப்பு குணம். அதற்குப்பின் அந்த மேடைக் குறிப்புகளும் ஆன அந்த நாடகப்பிரதியை நிகழ்த்துப் பிரதியாக பார்வையாளர்களிடத்தே பரிமாற என்னைப் போன்ற படைப்பாக்க மனநிலையைக் கொண்ட நடிகர்களையும் சக வடிவமைப்பாளர்களை உடன் சேர்க்க வேண்டிய இடம் சேர வேண்டியிருக்கிறது.   அந்த இடம்தான் நாடகப் படைப்...